"உக்ரைன்- ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுத தேவை அதிகரிப்பு - ரபேல் நிறுவன சிஇஓ
உக்ரைன் - ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக, இஸ்ரேலிய ரபேல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யோவ் ஹர்-ஈவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ரஃபேல் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய ஆயுதப்படைகளுக்கு பல்வேறு ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை வழங்கி வருகிறது.
அந்நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கும் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹார்-ஈவன், ரஃபேல் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகக் கூறினார்.
ரஃபேல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஹார்டுவேர்களை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments